இந்திய பெருங்கடலில் சுதேசி கப்பல் தனது முதல் வணிகப் பயணத்தை துவங்கிய (அக்.16) நாளை முன்னிட்டு புதிய துறைமுகம் முன்பு வ.உ.சி., திருவுருவ சிலைக்கு இந்து வியாபாரிகள் நலச்சங்க சார்பில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.
இந்திய சுதந்திரப் போராட்டத்தில் முக்கிய பங்காக கருதப்படும் போராட்டமான வ.உ.சிதம்பரனார் தனது சொந்த பணத்தில் இந்திய பெருங்கடலில் ஒரு இந்தியன் கடல் வாணிபத்தை துவங்க வேண்டும் என்று பெரும் பொருட்செலவில் துவங்கி கப்பல் விட்ட தினமான இன்று அக்டோபர் 16ஆம் தேதி காலை 9.30 மணியளவில் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் அவர்களின் தியாகத்தை போற்றக்கூடிய வகையில் வ.உ.சி துறைமுகம் முன்பு அமைந்துள்ள திருவுருவச் சிலைக்கு இந்து வியாபாரிகள் நலச்சங்க சார்பில் மாலை அணிவித்து மரியாதை இந்து வியாபாரிகள் நல சங்க தலைவர் வி. பி ஜெயக்குமார் தலைமையில் செலுத்தப்பட்டது.
இந்நிகழ்வில் இந்து முன்னணி மாநில செயலாளர் கா. குற்றாலநாதன், நெல்லை மாவட்ட தலைவர் சங்கர், மாவட்ட துணை தலைவர் பாபு, மாவட்ட பொது செயலாளர் செந்தில், இந்து முன்னணி மாவட்ட பொது செயலாளர் க. பிரம்மநாயகம், மாநகர மாவட்ட தலைவர் இசக்கி முத்துகுமார், ராகவேந்திரா, சிவலிங்கம், சுதாகர், மாவட்ட துணை தலைவர் செல்வராஜ், மாவட்ட செயலாளர் சுடலை, சுரேஷ் ராகவேந்திரா, சிவலிங்கம், மேற்கு மண்டல் தலைவர் சுதாகர், முத்துகிருஷ்ணன், ஒன்றிய தலைவர் கவின் சண்முகம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


