தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள செய்துங்கநல்லூர் சந்தையடியூரைச் சேர்ந்த தேவேந்திரகுல வேளாளர் மக்களுக்கு பாத்தியப்பட்ட ஊய்க்காட்டு சுடலைமாடசுவாமி கோவில் செய்துங்கநல்லூர் மெயின்ரோட்டில் அமைந்துள்ளது.
இந்த கோவிலில் இன்று அதிகாலை 2.30 மணி அளவில் புகுந்த மர்மகும்பல் கோவிலில் இருந்த உண்டியலை உடைத்து திருடியுள்ளனர். அப்போது எதிரே இருந்த வீட்டில் செல்லையா என்பவர் வெளியே வந்து பார்த்துள்ளார்.
அவரை கண்டதும் அந்த கும்பல் அங்கிருந்து தப்பியோடியது. இன்று காலை கோவிலில் பார்த்த போது கோவில் உண்டியல் உடைக்கப்பட்டு, அதில் இருந்த பணம் திருடு போயிருந்தது தெரியவந்தது.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் அளித்த புகாரின் பேரில் செய்துங்கநல்லூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


