தூத்துக்குடி மாவட்டம், வல்லநாடு அருகே அகரம் கிராமத்தில் உள்ள பொதுமக்களுக்கு பகுதி நேர ரேஷன் கடை, அங்குள்ள நூலக கட்டிடத்தில் இயங்கி வந்தது.
இதற்கிடையில் ஊர் பொதுமக்கள் மற்றும் பஞ்சாயத்து தலைவர் இணைந்து நிரந்தர ரேஷன் கடை அகரம் கிராமத்திற்கு வேண்டுமென கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்த நிலையில் அகரம் கிராமத்தில் நிரந்தர புதிய ரேசன் கடை கட்டுவதற்கு ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 9.13 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இதற்கிடையில் அகரம் கிராமத்தில் இன்று புதிய ரேசன் கடைக்கு அடிக்கல் நாட்டு விழா நடந்தது. இதில் ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா கலந்து கொண்டு புதிய ரேசன் கடை கட்டுமான பணிக்கு அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் கருங்குளம் யூனியன் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் முத்துகிருஷ்ணராஜா, அரவிந்தன், வல்லநாடு பஞ்சாயத்து தலைவர் சந்திரா முருகன், கருங்குளம் ஒன்றிய செயலாளர்கள் வடக்கு ராமசாமி, கிழக்கு சுரேஷ் காந்தி, துணைச் செயலாளர் பக்கபட்டி சுரேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


