திருச்செந்தூரில் மாவட்ட அளவில் நடைபெற்ற கபாடி போட்டியில் நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப் பள்ளி அணி வெற்றி பெற்றது.
தூத்துக்குடி மாவட்ட அளவில் கபடி போட்டி திருச்செந்தூரில் நடைபெற்றன. இதில் பல்வேறு சுற்றுக்களாக போட்டி நடந்தது. நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப் பள்ளி அணி சென்ட்ரல் மேல்நிலைப்பள்ளி அணியை வீழ்த்தி கால் இறுதிப்போட்டிக்கும், காயல் பட்டினம் அணியை வீழ்த்தி அரை இறுதிப்போட்டிக்கும் மெஞ்ஞானபுரம் அம்புரோஸ் மேல்நிலைப்பள்ளி அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கும் நுழைந்தது.
இறுதிப் போட்டியில் நாலுமாவடி காமராஜர் மேல் நிலைப் பள்ளி அணியினை என்ற 49-20 புள்ளி வித்தியா சத்தில் தோற்கடித்து முதல் இடம்பெற்று டாக்டர் சிவந்தி ஆதித்தனார் கோப்பையைக் கைப்பற்றியது. பரிசளிப்பு விழாவில் வெற்றிக் கோப்பை மற்றும் சான்றிதழ்களை “அர்ஜூனா விருது பெற்ற” அகில இந்திய கபாடி வீரர் மணத்தி கணேசன் நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப்ப ள்ளிஅணிக்குவழங்கினார்.
அணி வீரர்களை பயிற்று வித்த உடற்கல்வி இயக்குநர் பெலின் பாஸ்கர், உடற் கல்வி ஆசிரியர்கள் சுஜீத் செல்வசுந்தர் மற்றும் தன பால்ஆகியோரையும்,பொறு ப்பாசிரியர் கெர்சோம் ஜெப ராஜ் மற்றும் மாணவர்களை மர்காஷிஸ் மேல்நிலைப் பள்ளி தாளாளர் சுதாகர், தலைமையாசிரியர் கென்னடி வேதராஜ், ஆசிரியஆசிரியைகள் மற்றும் அலுவலக ஊழியர்கள் பாராட்டினர்.


