மலேசியாவில் நடைபெறும் ஜூனியர் சுல்தான் கோப்பைக்கான இந்திய ஹாக்கி அணியில் கோவில்பட்டி விளையாட்டு மாணவர் விடுதி சதிஷ் இடம் பிடித்துள்ளார்.
மலேசியாவில் அக்டோபர் 27 முதல் நவம்பர் 4 வரை சுல்தான் ஆப் ஜோகர் கோப்பை ஜூனியர் ஹாக்கி 11வது சீசன் நடைபெறுகிறது. இதில் இந்தியா,பாகிஸ்தான், மலேசியா, நியூசிலாந்து, ஜெர்மனி ஆஸ்திரேலியா தென் ஆப்ரிக்கா, இங்கிலாந்து என 8 அணிகள் பங்கேற்க உள்ளன. இதற்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணியில் கோவில்பட்டி விளையாட்டு மாணவர் விடுதியில் பயிற்சி பெற்று வரும் சதிஷ் இடம் பெற்றுள்ளார். இவர் கோவில்பட்டி எஸ். எஸ்.டி.எம். கல்லூரியில் 3 ம்ஆண்டு பயின்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


