தூத்துக்குடியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் கட்டப்பட்டுள்ள அண்ணா பேருந்து நிலையத்தில் இருந்து பஸ்கள் இயக்கப்பட்டு இன்று முதல் பயன்பாட்டிற்கு வந்துள்ளது.
தூத்துக்குடி பழைய பேருந்து நிலையம் என்று அழைக்கப்படும் அண்ணா பேருந்து நிலையம் முழுமையாக இடித்து அகற்றப்பட்டு, ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.58.67 கோடி மதிப்பில்13630 ச.மீ. பரப்பளவில் 4 தளங்களுடன் அதி நவீன வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா கடந்த ஞாயிற்றுக் கிழமை மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தலைமையில் நடைபெற்றது.
தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கேஎன் நேரு ஆகியோரால் திறந்து வைக்கப்பட்டது. இந்த பேருந்து நிலையம் இன்று காலையில் இருந்து செயல்பட தொடங்கியது. முதற்கட்டமாக திருச்செந்தூர், திருநெல்வேலி பேருந்துகள் இங்கிருந்து இயக்கப்பட்டன. பல ஆண்டுகளுக்கு பின்னர் பேருந்து நிலையம் செயல்பாட்டிற்கு வந்துள்ளதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


