தூத்துக்குடி மாவட்ட காவல் துறை சார்பில் எஸ்பி பாலாஜி சரவணன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் உத்தரவின்படி தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் மனு கூட்டம் வாரந்தோறும் புதன் கிழமைகளிலும் நடைபெற்று வருகிறது. இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் தலைமையில் குறைதீரக்கும் மனு கூட்டம் நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டத்தின் பல்வேறு காவல் நிலையங்களில் புகார் அளித்த 5 மனுதாரர்கள் மற்றும் புதிதாக மனு கொடுக்க வந்த 53 மனுதாரர்கள் என மொத்தம் 58 மனுதாரர்கள் தங்கள் குறைகளை நேரடியாக தெரிவித்து புகார் மனு அளித்தனர். பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்த காவல் கண்காணிப்பாளர் உடனடியாக விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்குமாறு சம்மந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.


