தூத்துக்குடியில் உலக விண்வெளி வார விழா அன்னம்மாள் பெண்கள் கல்வியியல் கல்லூரியின் அறிவியல் கழகம் உலக வானியல் வார விழாவை தூத்துக்குடி அஸ்ட்ரோ க்ளப் ஒருங்கிணைத்து நடத்தியது.
விழாவிற்கு சிறப்பு விருந்தினர்களாக தூத்துக்குடி அஸ்ட்ரோ க்ளப் தலைவர் எழிலன், திருநெல்வேலி அஸ்ட்ரோ க்ளப் தலைவர் சுவாமி தாஸ் மற்றும் தமிழ்நாடு அஸ்ட்ரோ சயின்ஸ் சொசைட்டி மாநிலசெயல் குழு உறுப்பினர் முத்துசாமி கலந்து கொண்டு விண்வெளி மற்றும் தொழில் முனைவு கருத்து சிறப்புரை ஆற்றினர்.
ஆசிரிய மாணவி டோஷினி சந்திராயன் விண்கலத்தை பற்றி பேசினார். அனைத்து ஆசிரிய மாணவிகளும் தொலைநோக்கி மூலம் தூத்துக்குடி கடல்பகுதியில் தொலைவில் உளாளவற்றை தொலைநோக்கி மூலம்கண்டு மகிழ்ந்தனர்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரியின் பொருளறிவியல் துறை பேராசிரியரும் கல்லூரியின் அறிவியல் கழக ஒருங்கிணைப்பாளருமான முனைவர் சுதா குமாரி செய்திருந்தார்.


