தூத்துக்குடியில் ரூ.52 கோடியில் கட்டப்பட்டுள்ள அண்ணா பேருந்து நிலையத்தை அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைத்தார்.
தூத்துக்குடி பழைய பேருந்து நிலையம் என்று அழைக்கப்படும் அண்ணா பேருந்து நிலையம் முழுமையாக இடித்து அகற்றப்பட்டு, ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சுமார் ரூ.52 கோடி மதிப்பில் 4 தளங்களுடன் அதி நவீன வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா இன்று மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தலைமையில் இன்று நடைபெற்றது.
விழாவில் நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் கே.என்.நேரு, நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி, அமைச்சர்கள் கீதா ஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன், மாநகர மேயர் ஜெகன் பெரியசாமி சட்டமன்ற உறுப்பினர்கள் எம்.சி.சண்முகையா மற்றும் ஜி.வி மார்க்கண்டேயன் ஆகியோர் முன்னிலையில் தூத்துக்குடி அண்ணா பேருந்து நிலையத்தை திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையர் தினேஷ் குமார்,துணை மேயர் ஜெனிட்டா, பொறியாளர்கள், துணை ஆணையர்கள், மண்டல தலைவர்கள் மாமன்ற உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


