திருச்செந்தூரில் பல்வேறு துறைகளின் சார்பில் மொத்தம் 48 கோடி ரூபாய் மதிப்பிலான முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்து, புதிய திட்டப் பணிகளுக்கு தமிழக நகராட்சி மற்றும் நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி அடிக்கல் நாட்டினார்.
திருச்செந்தூரில் புதிதாக கட்டப்பட்ட சந்தை மேம்பாட்டு கட்டிடம் உள்ளிட்ட நிறைவு பெற்ற பணிகளை திறந்து வைத்து மற்றும் புதிய திட்டத்திற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இதில் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே என் நேரு தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி எம்பி அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டு திட்டப்பணிகளை துவங்கி வைத்தனர்
திருச்செந்தூர் நகராட்சியில் புதிதாக கட்டப்பட்டுள்ள காய்கறி சந்தை மற்றும் உள்ளிட்ட முடிவுற்ற திட்டப்பணிகளை நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வடிகால் வழங்கல் துறை அமைச்சர் கே என் நேரு தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி எம்பி மீன்வளம் மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் திறந்து வைத்தனர் தொடர்ந்து
ஏரல் பேரூராட்சிக்கு புதிய அலுவலக கட்டிடம், சாத்தான்குளம் பேரூராட்சியில் பேருந்து நிலையம் மேம்பாடு மற்றும் ஆழ்வார் திருநகரி பேரூராட்சியில். அம்ரூத் திட்டத்தின் கீழ் குடிநீர் திட்ட பணிகள் உள்ளிட்ட புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்கள் மொத்தம் 25 . 30 கோடி மதிப்பில் திட்ட பணிகளை தொடங்கி வைத்தனர் இதைத் தொடர்ந்து நகராட்சி பணியாளர்கள் மற்றும் மகளிர் சுய உதவிக் குழுக்கள் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சருக்கு நேரு கனிமொழி இன்றி ஆகியோர் வழங்கினார்கள்
இதைத்தொடர்ந்து பேசிய கனிமொழி எம்பி தமிழகத்தில் கோயில்களுக்கு எதிரான திமுக செயல் படுவது போல் ஒரு பிம்பத்தை பிஜேபினர் ஏற்படுத்தி வருகிறார்கள் ஆனால் தனியார் இடம் உள்ள பல கோடி ரூபாய் கோவில் சொத்துக்கள் மீட்டுள்ள அரசு திமுக அரசு கோயில்களை பாதுகாக்கவும் கோயிலுக்கான திருப்பணிகளை செயும் அரசாக திமுக அரசு செயல்பட்டு வருகிறது மதத்தின் பெயரிலும் ஜாதியின் பெயரிலும் மக்களை பிளவுபடுத்த சிலர் வருகிறார்கள் அவர்களிடம் இருந்து மக்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் எனவும் எனக்கு கேட்டுக் கொண்டார்
இதைத் தொடர்ந்து பேசிய அமைச்சர் கே என் நேரு .,தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு முன்பாக ஜல்ஜீவன் திட்டம் செயல்படுத்துவதில் 36-வது இடத்தில் தமிழக அரசு இருந்தது ஆனால் திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு 9 மாதத்தில் ஜல்ஜீவன் திட்டத்தை செயல்படுத்துவதில் முதலிடத்தில் வந்துள்ளது இதுவரை 19 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான ஜல்ஜீவன் திட்ட பணிகள் செயல்படுத்தப்பட்டு பொதுமக்களுக்கு குடிநீர் வழங்கப்பட்டுள்ளது
மேலும் தமிழகத்தில் 19 ஜல் ஜீவன் திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது மேலும் கூட்டுக் குடிநீர் திட்டம் மூலமாகவும் அனைத்து பகுதிகளுக்கும் குடிநீர் வழங்குவதற்கான நடவடிக்கைகளை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் எடுத்து வருகிறார் என தெரிவித்தார் நிகழ்ச்சியில் நகராட்சி துறை இயக்குனர் சிவராசு தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் செந்தில்ராஜ் மாவட்ட ஊராட்சித் தலைவர் பிரம்ம சக்தி திருச்செந்தூர் நகராட்சி தலைவர் சிவானந்தி காயல்பட்டினம் நகராட்சி தலைவர் முத்துமுகமது உள்பட பலர் கலந்து கொண்டனர்.


