நாசரேத் அருகிலுள்ள திருமறையூர் ஆலய வளாகத்தில் பனை விதைகள் விதைக்கும் பணி நடைபெற்றது.
திருமறையூர் மறுரூப ஆலய வளாகத்தில் பனை விதைகள் விதைக்கும் பணி நடைபெற்றது. சேகர குரு ஜான் சாமுவேல் ஆரம்பித்து வைத்தார். தூய மாற்கு மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணி திட்ட மாணவர்கள் மற்றும் மதர் தெரசா டிரஸ்ட் நிறுவன இயக்குநர், கென்னடி உடன் இணைந்து சபையாரும் பனை விதைகள் விதைத்தார்கள். ஆலய வளாகத்தில் பனைக்கு இடம் கொடுத்திருப்பது (விதைப்பது) இதுவே முதல் முறையாக கூட இருக்கலாம்.
திருமறையூர் திருச்சபையார் உற்சாகத்தோடு கலந்துக் கொண்டனர். தமிழ் நாடு இறையியல் கல்லூரி அமைந்திருந்த திருமறையூர் வளாகத்திலும் பனை விதைகள் விதைக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் திறுமண்டல பெருமன்ற உறுப்பினர் ஜெயபால். சேகர செயலர் ஜான் சேகர் கமிற்றி அங்கத்தினர்கள் ஆசீர், பணியாளர் ஆபிரகாம் மற்றும் ஏராளமான மக்கள் கலத்து கொண்டனர். இந்நிகழ்ச்சிக்கு ஏற்பாடுகளை தூத்துக்குடி நாசரேத் திருமண்டல சுற்றுச்சூழல் கரிசனைத் துறையின் இயக்குனரும், திருமரையூர் சேகர தலைவருமாகிய ஜான் சாமுவேல் செய்திருந்தார்.


