தூத்துக்குடியில் வருகிற 8ம் தேதி திறக்கப்பட உள்ள பேருந்து நிலையத்தை அமைச்சர் கீதாஜீவன் பார்வையிட்டார்.
தூத்துக்குடியில் பழைய பேருந்து நிலையம் என்று அழைக்கப்படும் அண்ணா பேருந்து நிலையம் முழுமையாக இடித்து அகற்றப்பட்டு, ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.53 கோடியில் அதிநவீன வசதிகளுடன் பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா வருகிற 8ம் தேதி திறப்பு விழா நடைபெற உள்ளது. நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு பேருந்து நிலையத்தை திறந்து வைக்க உள்ளார்.
இவ்விழாவில் அமைச்சர்கள் கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன், மேயர் ஜெகன் பெரியசாமி மற்றும் பிரமுகர்கள் கலந்து கொள்கின்றனர். இந்நிலையில், பேருந்து நிலையத்தை அமைச்சர் கீதாஜீவன் பார்வையிட்டார். மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், மாநகராட்சி ஆணையர் தினேஷ்குமார், மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன் உள்ளிட்டோர் உடன் சென்றனர்.


