சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டம் சார்பில் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள செய்துங்கநல்லூர் தனியார் திருமண மண்டபத்தில் வைத்து கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா நடந்தது.
நிகழ்ச்சியில் கருங்குளம் வட்டார குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் சண்முகப்பிரியா வரவேற்றார். கருங்குளம் யூனியன் சேர்மன் கோமதி ராஜேந்திரன், ஸ்ரீவைகுண்டம் தாசில்தார் சிவக்குமார், கருங்குளம் வட்டார மருத்துவ அலுவலர் கிருஷ்ணஜோதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த வளைகாப்பு விழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா வளைகாப்பு விழாவில் கலந்து கொண்ட கர்ப்பிணி பெண்களுக்கு சீதனங்களை வழங்கி பேசினார். இந்த விழாவில் கருங்குளம் வட்டார அளவில் 100 கர்ப்பிணி பெண்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
இந்த நிகழ்ச்சியில் கருங்குளம் வட்டார திட்ட ஒருங்கிணைப்பாளர் சத்யன், கருங்குளம் ஒன்றிய செயலாளர்கள் வடக்கு ராமசாமி, கிழக்கு சுரேஷ் காந்தி, துணை செயலாளர் பக்கபட்டி சுரேஷ், மாவட்ட கவுன்சிலர் பால சரஸ்வதி நயினார், மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் சுகாதாரத்துறை பணியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


