சமவேலைக்கு சம ஊதியம் என்ற கோரிக்கையை வலியுறுத்தி ஆசிரியர்கள் சென்னையில் காலவரையற்ற உணவு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தப் போராட்டத்திற்கு ஆதரவாக தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் ஏரல் அருகே உள்ள ஆழ்வார்திருநகரி வட்டாரக்கிளையின் சார்பில் மாவடிப்பண்ணையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மாவடிபண்ணை வட்டார வளமைய அலுவலகத்திற்கு முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட தலைவர் ஜீவா தலைமை வகித்தார்.
ஆர்ப்பாட்டத்தில், சம வேலைக்கு சம ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் நடைபெறும் ஆசிரியர்களின் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்திற்கு ஆதரவாகவும் ஆசிரியர்களின் கோரிக்கைகளை உடனடியாக அரசு நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தியும் கோஷமிட்டனர். ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி ஆழ்வார்திருநகரி வட்டாரக்கிளை நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.


