செய்துங்கநல்லூரை சேர்ந்தவர் இளையராஜா. இவர் கன்னியாகுமரி மாவட்ட வன அலுவலராக பணி புரிந்து வருகிறார். இவருக்கு சிறந்த மாவட்ட வன அலுவலராக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று விருது வழங்கி கௌரவித்துள்ளார்.
மாவட்ட வன அலுவலர் இளையராஜாவின் பெற்றோர் முத்தையா, அனந்தம்மாள் தம்பதியினர். இவருடன் சேர்ந்து இவர்களுக்கு 4 ஆண் குழந்தைகள். கடைசி மகன்தான் இளையராஜா. இவர் ஆரம்ப பள்ளியை செய்துங்கநல்லூர் ஆர்.சி.நடுநிலைப்பள்ளியில் படித்தார். தொடர்ந்து மேல்நிலைப் பள்ளி படிப்பை பாளையங்கோட்டை ஜான்ஸ் மேல்நிலைப்பள்ளியில் முடித்தார். தொடர்ந்து பொறியியல் படிப்பை திருநெல்வேலி அரசு பொறியியல் கல்லூரியில் படித்தார். 2017 இல் இவர் ஐ.எப்.எஸ் தேர்வு எழுதி தேர்வாகி கன்னியாகுமரி மாவட்டத்தில் பயிற்சி வன அலுவலராக பணியாற்றினார்.

தொடர்ந்து தஞ்சாவூர் மாவட்டத்தில் வன அலுவலராக பணியாற்றினார். கடந்த இரண்டு வருடங்களாக கன்னியாகுமரி மாவட்டத்தில் மாவட்ட வன அலுவலராக பணியாற்றி வரும் இவருக்கு, சிறந்த மாவட்ட வன அலுவலருக்காக விருது கிடைத்தது.
இந்த விருதை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இன்று வழங்கினார். இளையராஜாவுக்கு ராகினி என்ற மனைவியும், இசான் என்ற இரண்டு வயது மகனும் உள்ளனர்.
சிறந்த மாவட்ட வன அலுவலர் விருது பெற்ற இளையராஜாவை செய்துங்கநல்லூர் ஊர்மக்கள் மற்றும் வணக்கம் ஸ்ரீவை இதழ் பாராட்டுக்கின்றனர்.


