மதர் சமூக சேவை நிறுவனம், சார்பில் மதர் பனைப் பொருள் உற்பத்தியாளர் குழு உறுப்பினர்களுக்கு இலவச சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
மதர் சமூக சேவை நிறுவனம், மாநில சட்டப் பணிகள் ஆணை குழு, மாவட்ட சட்டப் பணிகள் ஆணை குழு, திருச்செந்தூர் வட்ட சட்ட பணிகள் மற்றும் லீடு டிரஸ்ட் தொண்டு நிறுவனம் சார்பில் உடன்குடி அருகே உள்ள பிச்சிவிளை கிராமத்தில் இலவச சட்ட விழிப்புணர்வு முகாம், மற்றும் மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு வருகை தந்தவர்களை லீடு டிரஸ்ட் தொண்டு நிறுவன இயக்குனர் எஸ் பானுமதி வரவேற்றார். இளஞ்சிரார் காவல்துறை கமிட்டி பொறுப்பாளரும், மதர் சமூக சேவை நிறுவன இயக்குனரும் தமிழ்நாடு பனை பாதுகாப்பு மற்றும் தொழிலாளர் மேம்பாட்டு இயக்க மாநில தலைவருமான டாக்டர் எஸ் ஜே கென்னடி தலைமை தாங்கி பனைப் பொருள் உற்பத்தியாளர் குழு உறுப்பினர்களுக்கு மரக்கன்றுகளையும், விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கி முகாமை தொடங்கி வைத்தார். முகாமிற்கு தமிழ்நாடு பனை பாதுகாப்பு மற்றும் தொழிலாளர் மேம்பாட்டு இயக்க மாநில துணைத்தலைவர் ஏ.பொ.சுதாகர், தென் மண்டல தலைவர் ராம்குமார், தென் மண்டல செயலாளர் இம்மானுவேல் ஆகியோர் முன்னி வகித்தனர்.
முகாமில் திருச்செந்தூர் இலவச சட்ட உதவி மைய சட்ட தன்னார்வலர் ராஜேஷ் கலந்து கொண்டு கருத்துரை வழங்கினார். இதில் சட்ட ஆலோசனை பெற, சட்ட அறிவு விளக்கம் பெற, சட்ட பிரச்சனைகளில் சுமுக தீர்வு காண, திருமண வாழ்க்கை பிரச்சினைகளில் சமூகத் தீர்வு காண, கைது செய்யப்பட்டோர் உதவி பெற மற்றும் பிணையில் எடுக்க, நீதிமன்றங்களில் வழக்காட அல்லது எதிர் வழக்காட ,தீர்ப்புக்கு எதிராக மேல் முறையீடு செய்ய, மோட்டார் வாகன விபத்துகளில் பாதிக்கப்பட்டடோர் இழப்பீடு பெற, தொழிலாளர் தகராறுகளில் நிவாரணம் பெற, பெண் கொடுமைகளுக்கு எதிராக சட்ட உதவி மற்றும் ஜீவனாம்சம் பெற, அரசு அறிவித்துள்ள அனைத்து (திட்டங்கள்) சலுகைகள் பெற, பெண்களுக்கு குடும்ப நீதிமன்றங்களில் வழக்கிட மற்றும் எதிர் வழக்காட, அரசு ஆர்ஜிதம் செய்த நிலத்திற்கு இழப்பீடு பெற, சட்ட உதவி அல்லது ஆலோசனை பெற, வழக்குகளை நேரடியாக கோர்ட்டு முறையில்லாமல் மாற்று முறையில் தீர்வு காண்பதை பற்றிய விளக்கங்கள் பெற மாவட்ட இலவச சட்டப் பணிகள் ஆணைக் குழுவை அணுகலாம் என கூறினார்.
இதில் தமிழ்நாடு பனை பாதுகாப்பு மற்றும் தொழிலாளர் மேம்பாட்டு இயக்க தூத்துக்குடி மாவட்ட செயலாளர் மாணிக்கம், காயல்பட்டினம் நகரத் தலைவர் காயல் பாலா, மற்றும் பனைப் பொருள் உற்பத்தியாளர் குழு உறுப்பினர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர் முடிவில் மதர் அழகு பனை பொருள் உற்பத்தியாளர் குழு தலைவர் சங்கீதா நன்றி கூறினார். இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் மதர் சமூக சேவை நிறுவன ஒருங்கிணைப்பாளர் மற்றும் லீடு டிரஸ்ட் தொண்டு நிறுவன பணியாளர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.


