தூத்துக்குடியில் சிவந்தி ஆதித்தனார் பிறந்த நாளை முன்னிட்டு, அமைச்சர் கீதா ஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியேரர் மரியாதை செலுத்தினார்.
தூத்துக்குடியில் பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் 88ஆவது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தூத்துக்குடி வஉசி மார்க்கெட் அருகே அமைக்கப்பட்டுள்ள அவரது திருவுருவப்படத்திற்கு தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். இந்நிகழ்ச்சியில் மாநகரச் செயலாளர் எஸ் ஆர் ஆனந்த சேகரன், மாவட்ட அவைத் தலைவர் செல்வராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


