வீரபாண்டியன்பட்டினத்தில் சிவந்தி ஆதித்தனார் பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் மரியாதை செலுத்தினார்.
பத்மஸ்ரீ டாக்டர்.பா.சிவந்தி ஆதித்தனார் 88வது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம், வீரபாண்டியன் பட்டினத்தில் உள்ள அவரது நினைவு மண்டபத்தில் உள்ள முழு உருவச்சிலைக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் மீன்வளம்-மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ் தலைமையில் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா முன்னிலையில் இன்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.


