தூத்துக்குடியில் 54 விநாயகர் சிலைகள் விஜர்சனம் செய்யப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டனர்.
தூத்துக்குடியில் கடந்த 18ம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. விழாவை முன்னிட்டு முழுவதும் 54 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. தூத்துக்குடி மாநகர் இந்து முன்னணி சார்பாக தபசு மண்டம் அருகில் 12 அடியில் விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு இந்து எழுச்சி நாளாக ஒரு வாரம் கொண்டாடப்பட்டது. இதுபோல் தூத்துக்குடி நகரின் முக்கிய இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது.
இந்நிலையில் நகரில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை திரேஸ்புரம் கடலில் விஜர்சனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது. இதன்படி பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை வாகனங்களில் அலங்கரிக்கப்பட்டு சத்திரம் பஸ்ஸ்டாப் அருகேயுள்ள தபசு மண்டபத்திற்கு கொண்டுவரப்பட்டது. அதன்பின்னர் அங்கு அனைத்து சிலைகளுக்கும் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. அங்கிருந்து பேரணி தொடங்கியது,
இந்து முன்னணி மாநகர் மாவட்ட தலைவர் இசக்கிமுத்து குமார் தலைமை தாங்கினார் பேரணியை இந்து வியாபாரிகள் நலச்சங்கம் மாநிலச் செயலாளர் ஜெகன் கொடி அசைத்து துவக்கி வைத்தார். இதில் மாவட்டத் துணைத் தலைவர் சிவக்குமார் மாரியப்பன் மாவட்ட செயலாளர்கள் சரவணகுமார் ராகவேந்திரா சிவலிங்கம் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் பலவேசம் ஆழ்வார் மாவட்ட அமைப்பாளர் நாராயண ராஜ் இந்து வியாபாரிகள் சங்கம் மாநிலத் தலைவர் ஈஸ்வரன் தொழிலதிபர் ஏ எஸ் வி எஸ் ராஜசேகர் மத்திய அரசு வழக்கறிஞர் சண்முகசுந்தரம் பத்திர எழுத்தர் ஆதிநாத ஆழ்வார் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்
பின்னர் பேரணி தூத்துக்குடி முக்கிய சாலைகளின் வழியாக திரேஸ்புரம் கடற்கரையை அடைந்து அங்கு விநாயகர் சிலைகள் படகில் ஏற்றி சென்று கடலில் விஜர்சனம் செய்யப் பட்டது. தூத்துக்குடி மாவட்ட எஸ்பி பாலாஜி சரவணன் உத்தரவின் பேரில் நகர துணை கண்காணிப்பாளர் சத்யராஜ் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் ஐயப்பன் ராஜாராம் பிரேம் ஆனந்த் மணிமாறன் சப்-இன்ஸ்பெக்டர்கள் முருகப்பெருமாள் சிவக்குமார் உள்பட ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்


