தூத்துக்குடி பெருமாள் கோயிலில் புரட்டாசி முதல் சனிக்கிழமையை முன்னிட்டு, சத்தியநாராயணா அலங்காரத்தில் பெருமாள் எழுந்தருளி பக்தா்களுக்கு காட்சியளித்தாா்.
புரட்டாசி மாதத்தில் வரும் சனிக்கிழமைகளில், பக்தர்கள் விரதமிருந்து, பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடத்துவது வழக்கம். இந்நிலையில், தூத்துக்குடி ஸ்ரீவைகுண்டபதி பெருமாள் கோயிலில் புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையை முன்னிட்டு, காலையில் கோ பூஜை, விஸ்வரூப தரிசனம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
தொடா்ந்து சத்தியநாராயணா அலங்காரத்தில் பெருமாள் எழுந்தருளி பக்தா்களுக்கு காட்சியளித்தாா். இதையொட்டி, கோயில் பிரகாரத்தில் அமைந்துள்ள பால ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரங்கள், பூஜைகள் நடைபெற்றன. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.


