முத்தமிழறிஞர் டாக்டர்.கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் கோவில்பட்டி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாமில் மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை மாண்புமிகு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் திருமதி.பி.கீதா ஜீவன் அவர்கள் இன்று 23.9.23 வழங்கினார். மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ் இ.ஆ.ப., அவர்கள்,கோவில்பட்டி நகராட்சி தலைவர் திரு.கருணாநிதி அவர்கள்,கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் திருமதி.கஸ்தூரி சுப்புராஜ் அவர்கள்,மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் திரு.சந்திரசேகர் அவர்கள் ஆகியோர் உடன் உள்ளனர்.


