முத்தாலங்குறிச்சியில் ஐந்தரை அடி உயரத்தில் அமைந்துள்ள முக்குறுணி அரிசி விநாயகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடந்தது.

தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள முத்தாலங்குறிச்சியில் உள்ள இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான மிகவும் பழமையான, பிரமாண்டமான முக்குறுணி அரிசி விநாயகர் கோவில் அமைந்துள்ளது.

இந்த கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழா இன்று மிக விமர்சையாக கொண்டாடப்பட்டது. இதையட்டி அதிகாலை நடைதிறக்கப்பட்டு அருகில் உள்ள வீரபாண்டீஸ்வரர், லெட்சுமி நரசிம்மர் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு அபிசேகம் அலங்காரம் நடந்தது.

விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு முக்குறுணி அரிசி விநாயகருக்கு 21 வகையான அபிசேகமும், அலங்காரமும் நடந்தது. அதை தொடர்ந்து பிரமாண்டமான அருகம்புல் மாலையும் அணிவிக்கப்பட்டது. அதன்பின் சிறப்பு பூஜை நடந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் கட்டளைதாரரும் ஒய்வுபெற்ற சப் கலெக்டருமான வரதராஜன் கலந்து கொண்டார். அறங்காவலர்கள் காமராசு, வள்ளிநாதன், சுடலைமணி, தலையாரி பாலகிருஷ்ணன் உள்பட பலர் கலந்துகொண்டனர். பூஜை ஏற்பாடுகளை சேகர் கம்பர் செய்திருந்தார்.



