நெல்லை வண்ணார்பேட்டை ஆப்பிள் ட்ரி ஹோட்டலில் வைத்து தாமிரபரணி களஞ்சியம் நூல் அறிமுக விழா நடந்தது. இந்த நூலை எழுத்தாளர் ஜெபக்குமார் ஆயிரம் பூக்கள் மலரட்டும் என்ற தலைப்பில் தொகுத்துள்ளார்.
இதில் ஒருங்கிணைந்த நெல்லை மாவட்ட வரலாற்றை பல்வேறு எழுத்தாளர் கள் எழுத, எழுத்தாளர் ஜெபக்குமார் தொகுத்துள்ளார். இதன் வெளியிட்டு விழா கடந்த மாதம் நெல்லை தினவிழாவை முன்னிட்டு சென்னை தரமணியில் நடந்தது. தற்போது 100 கட்டுரைகளை தொகுத்து அதன் அறிமுக விழா நெல்லையில் நடந்தது.
இந்த நிகழ்ச்சியில் இயக்குனர் ஜாக்சன் ராஜ் அவர்களின் நெல்லை கீதம் முதலில் ஒளிபரப்பு செய்யப்பட்டது. அதன் பின் டாக்டர் விதுபாலா, எழுத்தாளர் நாறும்பூ நாதர், டாக்டர் சாரதா, செல்வி விசாலினி, அமெரிக்காவை சேர்ந்த கோமதி பெரிய திருவடி, அனிதா செல்வின், டாக்டர் ஜீலியட் வனிதா ராணி, சிவராஜ், எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு உள்பட பலர் பேசினார்கள். தாமிரபரணி குறித்த வரலாறு கூறும் ஒளிப்படம் ஒளிப்பரப்பு செய்யப்பட்டது. மாரிஈஸ்வரி உள்பட பலர் கலந்துகொண்டனர்.


