கரிசல் இலக்கிய தந்தை எனப் போற்றப்படும் கி.ராஜ நாராயணனின் 101வது பிறந்தநாளையொட்டி கோவில்பட்டியில் உள்ள நினைவரங்கத்தில் வாசிப்பு பழக்கத்தை அதிகப்படுத்திட அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
கோவில்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் கரிசல் இலக்கிய தந்தையின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்து வாசிப்பு பழக்கத்தை அதிகப்படுத்தி பொது அறிவையும்,கலைத்திறமையும் வளர்த்துக் கொள்ளவும்,வாசிப்பு பழக்கம் குறித்து பொது மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தவும், விருப்பமான துறைகளை தேர்வு செய்து சாதனை புரியவும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
மாணவிகள் அனனவரும் கி.ராஜநாராயணனின் நினைவரங்கத்தை பார்வையிட்டனர். இதில் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை ஜெயலதா,பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர் முத்து முருகன்,ஆசிரியர்கள் கவிதா,விஜயலட்சுமி, சசிகலா உள்பட பலர் கலந்து கொண்டனர்.


