கோவில்பட்டி ஐ.சி.எம் நடுநிலைப்பள்ளி தேசிய பசுமைபடை சார்பில் உலக ஓசோன் தின விழா நடைபெற்றது.
சுற்றுச்சூழலை பாதுகாக்கவும்,ஓசோன் படலம் பாதுகாப்பதின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும் செப்-16ம் தேதி உலக ஓசோன் தினம் கடைபிடிக்கப்படுகிறது. இதனையொட்டி கோவில்பட்டி ஐ.சி.எம் நடுநிலைப் பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் மாணவர்கள் பயன்படுத்த முடியாத தண்ணீர் பாட்டிலில் மணல் நிரப்பி வெண்டை விதைகளை ஊன்றினர்.ஓசோன் விழிப்புணர்வு குறித்த படைப்புகளை கண்காட்சியில் வைத்திருந்தனர். ஓவியப் போட்டியில் கலந்து கொண்டு தனது திறமைகளை வெளிப்படுத்தினர்.
இந்நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியர் ராதா தலைமை வகித்தார். கோவில்பட்டி அஸ்ட்ரோ கிளப் ஒருங்கிணைப்பாளர்கள் சுரேஷ்குமார்,முத்து முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கோவில்பட்டி பசுமை இயக்க தலைவர் ஜெகஜோதி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உலக ஓசோன் தின விழிப்புணர்வு கண்காட்சியை பார்வையிட்டு ஓவியப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கி பேசினார்.
தமிழ்நாடு அஸ்ட்ரானமி சயின்ஸ் சொசைட்டி மாநில செயற்குழு உறுப்பினர் முத்துசாமி,ஆசிரியர்கள் அபிலாதிரேஷ் ,செல்லம்மாள்,சுப்புலட்சுமி,உள்பட மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர். முன்னதாக பள்ளி ஆசிரியர் செல்வகுமார் வரவேற்றார். முடிவில் ஆசிரியை பத்மாவதி நன்றி கூறினார்.


