தூத்துக்குடி மாவட்டம், திருவைகுண்டம் வட்டம், கருங்குளம் ஒன்றியத்தை சார்ந்த, செய்துங்கநல்லூர் தென்னஞ்சோலை பகுதி மக்கள் சார்பாக தங்களின் கனிவான பார்வைக்கு இந்த மனுவை அளிக்கிறேன். திருச்செந்தூர் நெடுஞ்சாலை பணியில்
நெல்லை -செய்துங்கநல்லூர் இருபக்கமும் வடிகால் அமைத்து வருகிறார்கள். மேற்படி வடிகாலை நேரடியாக மருதூர் மேலக்காலில் தான் விடவேண்டும்.
ஆனால் நெடுஞ்சாலை துறையினர் அப்படி செய்யாமல் செய்துங்கநல்லூரில் கழிவு நீர் வடிகாலுக்காக கட்டப்பட்டுள்ள சிறிய அளவிலான வடிகாலில் இணைக்க உள்ளனர். பெரும்மழை காலங்களில் கடுமையான வெள்ளம் ஊருக்குள் புகுந்து பெருந்சேதத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.
மேற்படி வடிகாலை இணைத்துள்ள இடம் தினசரி சந்தைக்கு எதிரில் அமைப்பட்டுள்ளது. மேற்படி நெடுஞ்சாலை துறை வடிகால் திட்டதினால் மழைக்காலத்தில் செய்துங்கநல்லூர் ஊருக்குள் பெரும் வெள்ளம் நுழைவதற்கு வாய்ப்பு அதிகம் உள்ளது. செய்துங்கநல்லூர் ஊர் மக்களை மழைக்கால வெள்ளங்களிலிருந்து காப்பாற்றுமாறு கேட்டுக்கொள்கிறோம்.


