தூத்துக்குடி மாவட்டம் – திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில், பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளான இன்று (15/09/2023) கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி கருணாநிதி எம்.பி தொடங்கி வைத்தார். பயனாளிகளுக்கு ATM அட்டையை கனிமொழி எம்.பி வழங்கினர்.

தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக செயலாளரும்,மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ், தூத்துக்குடி கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) தாக்கரே சுபம் ஞானதேவ் ராவ், தூத்துக்குடி மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பிரம்மசக்தி, வருவாய் கோட்டாட்சியர் குருச்சந்திரன், திருச்செந்தூர் ஒன்றிய திமுக செயலாளர் AB.ரமேஷ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.



