முத்துமாலைபுரத்தில் மாலை நேர படிப்பகம் மற்றும் விளையாட்டு திடல் திறப்பு விழா நடந்தது.

தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள முத்துமாலைபுரத்தில் தோரணமலை முருகன் கோவிலுக்கு 50 ஆண்டுகளை கடந்து இறை பணி செய்த ஆதிநாராயணன் சந்திரலேகா அவர்களின் பெயரில் மாலை நேர படிப்பகம் மற்றும் விளையாட்டு திடல் துவக்க விழா நடந்தது.

இந்த நிகழ்ச்சிக்கு திருச்செந்தூர் வட்டாட்சியர் கோபாலகிருஷ்ணன் தலைமை வைத்தார். எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு, ஸ்ரீவைகுண்டம் துணை வட்டாட்சியர் அய்யனார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தோரணமலை முருகன் கோவில் அறங்காவலர் செண்பகராமன் அனைவரையும் வரவேற்று பேசினார். ஆவுடையானூர் டாக்டர் தர்மராஜ் படிப்பகம் மற்றும் விளையாட்டு திருடலை திறந்து வைத்து சிறப்புரை ஆற்றினார்.

இந்த நிகழ்ச்சியில் சிலம்ப ஆசிரியர் சிலம்பு பாப்பையா, கணபதி ஆசான் ஆகிய மாணவர்களின் சிலம்பாட்டம் மற்றும் நிகழ்ச்சிகள் நடந்தது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


