அக்ஷய் குமார் 1967ல் செப்டம்பர் 9 ஆம் நாள் பிறந்தார். அவர் ஓர் இந்தியத் திரைப்பட நடிகர் ஆவார். அவர் 90க்கும் மேற்பட்ட இந்தித் திரைப்படங்களில் தோன்றியுள்ளார்.அக்க்ஷய் பஞ்சாபில் அமிர்தசரசில் ஒரு பஞ்சாபிய[3] குடும்பத்தில் பிறந்தார். அவரது தந்தை ஓர் அரசாங்கப் பணியாளர் ஆவார்.இளம்வயது முதற்கொண்டே, அவர் ஒரு கலைஞராக அதிலும் குறிப்பாக நடனமாடுபவராக அடையாளம் கண்டறியப்பட்டார்.குமார் டெல்லி சாந்தினி சௌக் சுற்றுப் புறத்தில் வளர்ந்தார். அதன்பின்னரே அவர் மும்பைக்கு இடம்பெயர்ந்தார். அங்கே, அவர் கோலிவாடா அதாவது பஞ்சாபியர்கள் நிறைந்த பகுதியில் குடிபுகுந்தார். அவர் டான்பாஸ்கோ பள்ளியில் கல்வி பயின்றார். பிறகு கல்சா கல்லூரியில் பயின்றார்.
2008ல், கனடா, ஆண்டாரியோவில் அமைந்து உள்ள விண்ட்சர் பல்கலைக் கழகம், அவருக்கு சட்டத் துறையில் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கியது. அது அவரின் இந்தியத் திரைத்துறைக்கு அளித்த மகத்தான பங்களிப்புக்குரிய அங்கீகாரமாகும்.2009ல், அவர் இந்திய அரசாங்கத்தாரால் பத்மஸ்ரீ விருது பெற்றார்.


