தூத்துக்குடி மாவட்டம், தாமிரபரணி ஆற்றின் கரையோரம் அமைந்துள்ள ஆதிச்சநல்லூரில் மத்திய தொல்லியல் துறை சார்பில் சைட் மியூசியம் அமைக்கப்பட்டுள்ளது. இதை கடந்த மாதம் 5 ந்தேதி கனிமொழி எம்பி முன்னிலையில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் திறந்து வைத்தார். இந்தியாவிலேயே முதல் முதலாக இங்கு தான் சைட் மியூசியம் அமைக்கப்பட்டுள்ளது. உள்ளது உள்ள படியே என்ற படி இங்கு தோண்டப்பட்ட குழிகள் மூடப்படாமல் அதன் மேல் கண்ணாடி அமைக்கப்பட்டு அதன் மீது நின்று பார்க்கும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ளது. மத்திய தொல்லியல் துறை இயக்குனர் அருண்ராஜ் தலைமையில் தொல்லியல் அதிகாரி யத்தீஸ்குமார் உள்பட ஆய்வாளர்கள் இதற்கான பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதை பார்வையிட ஏராளமானோர் வருகை தந்த வண்ணம் உள்ளனர். திரைப்பட இயக்குனர்கள், அதிகாரிகள், பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் பொதுமக்கள் இந்த இடத்தனை பார்வையிட்டு வருகின்றனர். இந்த இடத்தினை பார்வையிட இன்று (7.09.2023) நெதர்லாந்து பல்கலைகழகத்தில் தாமிரபரணி நீர்நிலைகளும் விவசாய சங்கங்களும் என்ற தலைப்பில் ஆய்வு செய்யும் ஆய்வு மாணவி ஷிபா வருகை தந்தார். இவர் அங்கே வைக்கப்பட்ட முழு மனித எலும்பு கூடு, மாதிரி அருங்காட்சியகம், 2023 ல் நடந்த அகழாய்வு குறித்த விளக்க புகைப்படும். உள்ளது உள்ளபடியே உள்ள சைட் மியூசியம் ஆகியவற்றை பார்வையிட்டார். இங்கு ஆய்வின் போது கிடைத்த தங்கம், இரும்பு, மண்பாண்டம் போன்ற பொருள்களை பார்வையிட்டார். அவருக்கு எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு விளக்கம் அளித்தார். அவருடன் மூத்த பத்திரிக்கையாளர் ராமசந்திரன், பெங்களூர் சொர்ணம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

தினமும் வெளிநாடுகள், வெளிமாநிலங்களில் இருந்து பார்வையாளர்கள் சைட் மியூசியத்துக்கு வந்த வண்ணம் உள்ளனர். உள்ளூர் கல்லூரி மாணவ மாணவிகள் மற்றும் பொதுமக்களும் ஆர்வத்துடன் ஆதிச்சநல்லூரில் உள்ள சைட் மியூசியத்தினை பார்வையிட்டு வருகின்றனர். இதனால் தொல்லியல் அதிகாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தொடர்ந்து அடுத்த இடங்களிலும் சைட் மியூசியம் அமைக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.


