தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் வெற்றிலைக்கு புவிசார் குறியீடு சான்றிதழ் வழங்கும் விழா மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தலைமையில் செப்.7ம் தேதி இன்று நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி கலந்து கொண்டு ஆத்தூர் வெற்றிலை பாக்கு புவிசார் குறியீடு சான்றிதழை ஆத்தூர் பகுதி விவசாயிகளிடம் அவர் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி மேயர் ஜெகன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன், தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் தினேஷ் குமார், ஊராட்சி மன்ற தலைவி பிரம்மசக்தி, உதவி ஆட்சியர் வளர்ச்சி தாக்கரே சுபம் ஞானதேவ் ராவ், சார் ஆட்சியர் கௌரவ் குமார் உள்ளிட்ட துறை சார்ந்த அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


