திருச்செந்தூர் கோவிலில் ஆவணித் திருவிழா 3ம்திருநாளான இன்று காலை சுவாமி ஸ்ரீகுமரவிடங்கப்பெருமான் – ஸ்ரீவள்ளி ஸ்ரீதேவசேனா சமேத பூங்கேடயச் சப்பரத்தில் எழுந்தருளி வீதியுலா நடைபெற்றது.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆவணித் திருவிழா நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் சுவாமியும், அம்பாளும் தினமும் காலை மற்றும் மாலை நேரத்தில் வெவ்வேறு வாகனங்களில் வீதி உலா சென்று பக்தர்களுக்கு காட்சி அளித்து வருகின்றனர். 3ஆம் நாளான இன்று இன்று (புதன்கிழமை) அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. 4.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 5 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடந்தது.
காலை 7 மணிக்கு சுவாமி ஸ்ரீகுமரவிடங்கப்பெருமான் – ஸ்ரீவள்ளி ஸ்ரீதேவசேனா சமேத பூங்கேடயச் சப்பரத்தில் எழுந்தருளி வீதியுலா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். மாலை 6.30 மணிக்கு மேலக்கோவிலில் இருந்து சுவாமி தங்க முத்துக்கிடா வாகனத்திலும், அம்பாள் வெள்ளி அன்ன வாகனத்திலும் உலா வருகிறார்கள். விழா ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு தலைவர் அருள்முருகன், அறங்காவலர்கள் அனிதா குமரன், கணேசன், ராமதாஸ், செந்தில் முருகன், இணை ஆணையர் கார்த்திக் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்


