தூத்துக்குடியில் சர்வதேச இளைஞர் தினத்தை முன்னிட்டு, எய்ட்ஸ் போதை தடுப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக மாரத்தான் போட்டி நடைபெற்றது.
சர்வதேச இளைஞர் தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி தருவை விளையாட்டு அரங்கம் முன்பு தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கம் மற்றும் தூத்துக்குடி மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு அலகின் சார்பில் எய்ட்ஸ் மற்றும் போதை தடுப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக கல்லூரி மாணவர்களுக்கான 5 கிலோமீட்டர் மாரத்தான் போட்டி நடந்தது. போட்டியை மாவட்ட சார் ஆட்சியர் கௌரவக்குமார் துவக்கி வைத்தார்.
மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அலுவலர் பொற்செல்வன் தலைமை ஏற்று நடத்தினார். தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை முதல்வர் சிவக்குமார், காசநோய் துணை இயக்குனர் சுந்தரலிங்கம், மாவட்ட விளையாட்டு அலுவலர் அந்தோணி அதிசயராஜ், மாவட்ட திட்ட மேலாளர் அமலவளன், மாவட்ட மேற்பார்வையாளர் மகாராஜ மகேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக எய்ட்ஸ் போதை விழிப்பு குறித்து உறுதிமொழி எடுத்து கொண்டனர்.. போட்டியில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மாணவர்கள் மாணவிகள் திருநங்கைகள் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த மாரத்தான் தருவை மைதானத்தில் தொடங்கி ரோச் பூங்கா வழியாக சென்று மீண்டும் அதே வழியாக தருவை விளையாட்டரங்கம் முன்பு முடிந்தது.. இப்போோட்டியில் மாணவர்கள் மாணவிகள் திருநங்கைகள் பிரிவில் முதலிடம் பரிசாக 10,000 இரண்டாம் பரிசாக 7000 மூன்றாம் பரிசாக 5000 வழங்கப்பட்டது.. மேலும் ஆறுதல் பரிசும் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில், மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு அலுவலக பணியாளர்கள், தன்னார்வ தொண்டு நிறுவன பணியாளர்கள், விளையாட்டு மேம்பாட்டு ஊழியர்கள், பயிற்சியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


