ஓட்டப்பிடாரத்தில் வ.உ.சிதம்பரனாரின் பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு அவரது சிலைக்கு மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் 152வது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு ஓட்டப்பிடாரத்தில் உள்ள வ.உ.சி பிறந்த இல்லத்தில் உள்ள திருவுருவச் சிலைக்கு மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா, மாவட்ட வருவாய் அலுவலர் ச.அஜய் சீனிவாசன் ஆகியோர் இன்று 5.9.23 மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
விழாவில் கோவில்பட்டி வருவாய் கோட்டாட்சியர் ஜேன் கிறிஸ்டி பாய், ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றிய குழுத்தலைவர் எல்.ரமேஷ், வ.உ.சியின் கொள்ளுப்பேத்தி செல்வி, ஓட்டப்பிடாரம் வட்டாட்சியர் சுரேஷ்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


