தூத்துக்குடியில் வ.உ. சிதம்பரனாரின் 152வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
சுதந்திரப் போராட்ட வீரரும் சுதேசி கப்பலோட்டிய தமிழனுமான வ.உ. சிதம்பரனாரின் 152 ஆவது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தூத்துக்குடி பழைய மாநகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு அதிமுக மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.சண்முகநாதன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
அதைத்தொடர்ந்து தமிழ்நாடு வ.உ.சி பேரவை மாநில இளைஞரணி செயலாளரும் அதிமுக வட்டக் கழக செயலாளருமான திருச்சிற்றம்பலம், மற்றும் பகுதி எம்ஜிஆர் இளைஞர் அணி இணைச் செயலாளர் டைகர் சிவா ஏற்பாட்டில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. சண்முகநாதன் 300க்கும் மேற்பட்டோருக்கு நலத்திட்ட உதவி வழங்கினார்.
விழாவில், அதிமுக அமைப்பு செயலாளர் சின்னத்துரை, மாவட்ட அவைத் தலைவர் வழக்கறிஞர் திருப்பாற்கடல், முன்னாள் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் சுதாகர், முன்னாள் நகர் மன்ற தலைவர் இரா. ஹென்றி, வழக்கறிஞர் பிரபு, மாவட்ட சார்பு அணி செயலாளர்கள் டேக் ராஜா, நடராஜன், பில்லா விக்னேஷ் கே.ஜே.பிரபாகர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


