ஆசிரியர் நாள் (Teachers Day) இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 5 ஆம் நாளன்று கொண்டாடப்பட்டு வருகிறது.ஆசிரியராகப் பணியைத் தொடங்கி இந்தியாவின் குடியரசுத் தலைவராக உயர்ந்த சர்வபள்ளி இராதாகிருஷ்ணனின் நினைவாக அவரது பிறந்த நாளன்று இந் நாள் கொண்டாடப்படுகிறது.
ஆசிரியர் நாள் என்பது கல்வி பயிற்றுவிக்கும் ஆசிரியர்களுக்கு நன்றி செலுத்தும் வகையில் பல்வேறு நாடுகளில் பல்வேறு நாட்களில் கொண்டாடப்படுகிறது. சில நாடுகளில் விடுமுறை நாளாகவும், பிற நாடுகளில் பணி நாளாகவும் உள்ளது.


