ஸ்ரீவைகுண்டம் குமரகுருபர் சுவாமிகள் மேல்நிலைப்பள்ளியில் இன்று சூரியனை ஆய்வு செய்வதற்காக ஆதித்யா 1செயற்கைக்கோள் ஏவபடுவதை நேரலையில் பார்வையிடுவதற்காக தேசிய மாணவர் படை மாணவர்களுக்கு சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அதன்படி இன்று காலை 11:30 மணிக்கு தலைமை ஆசிரியர் முத்துசிவன் தேசிய மாணவர் படை ஆசிரியர் மாணிக்கம் ஆகியோர் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்திருந்தனர்.
நிகழ்ச்சியில் பள்ளியின் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்துகொண்டு ஆதித்யா 1வெற்றிகரமாக ஏவப்பட வேண்டும், அது வெற்றிகரமாக செயல்பட வேண்டும் என்பதற்காக சிறப்பு பிரார்த்தனை நடத்தப்பட்டது.
செயற்கைக்கோள் ஏவப்பட்டதை மாணவர்கள் ஆரவாரத்துடன் கைத்தட்டி மகிழ்ச்சியுடன் கண்டு களித்தினர். இந்த நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர் பாலசுப்ரமணியன் தலைமை எழுத்தர் கணபதி ஆகியோர் கலந்து கொண்டனர்.


