சென்னை தரமணி ஸ்பாஸ்டிக் சொசைட்டி ஆப் தமிழ்நாடு ஆடிட்டோரியத்தில் நெல்லை தினவிழா மற்றும் நெல்லை ரத்னா விருது வழங்கும் விழா நடந்தது.
சென்னை வாழ் நெல்லை மக்கள் நலச்சங்கம் சார்பில் நடைபெற்ற இந்த விழாவில் டாக்டர் சுதா ஷேசய்யன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நெல்லை ரத்னா விருது வழங்கினார்.
இதில் தலைமை விருந்தினராக பீட்டர் அல்போன்ஸ் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் பொதுச்செயலாளர் சங்கர்மணி வரவேற்புரை ஆற்றினார். சங்கத்தலைவர் வழக்கறிஞர் சைமன் ஜெயக்குமார் அறிமுக உரையாற்றினார். இந்த நிகழ்ச்சியில் நெல்லை ரத்னா விருதை எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசுவுக்கு டாக்டர் சுதா ஷேசய்யன் வழங்கி கௌரவித்தார்.
எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு திருநெல்வேலி, தாமிரபரணி, மேற்குதொடர்ச்சி மலை, சித்தர்கள், களரி அடிமுறை, அறியப்படாத சுதந்திர போராட்ட தியாகிகள் என களப்பணி மூலம் 65 நூல்களை எழுதியுள்ளார். ஆதிச்சநல்லூரில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைய மதுரை உயர்நீதிமன்றம் மூலமாக வழக்கு தொடர்ந்து வெற்றி கண்டவர். இவர் தமிழக அரசு தமிழச்செம்மல் விருது, தமிழக கலை பண்பாட்டுத்துறை சார்பில் இவர் நாடகத்தில் பணிபுரிந்த வகைக்கு கலை நன்மணி விருது, நாகர்கோயில் ராஜகோகிலா அறக்கட்டளையில் ராஜகோகிலா விருது, நியூஸ் 7 தொலைக்காட்சியின் தமிழ் ரத்னா சிறப்பு விருது, கலைஞர் டிவியின் சிறந்த எழுத்தாளர் விருது உள்பட பல விருது பெற்றுள்ளார். இவர் தூத்துக்குடி மாவட்ட ஆட்சி தலைவரின் தலைமையில் இயங்கும் கலை இலக்கிய இசை சங்கத்தின் உறுப்பினராகவும் உள்ளார்.
இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக வி.ஜி.சந்தோசம், இஸ்ரோ விஞ்ஞானி முத்து, புலம்பெயர் தமிழர் நலவாரியம் மீரான், நெல்லை அன்னபூர்£ உணவக குழுமம் விஜய சுப்பிரமணியன், மெர்க்குரி நெட்வொர்க் ஆண்டனி, ஊடகவியலாளர் ஆவுடையப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
டாக்டர் எம்.ஜி.ஆர்.பல்கலைகழக முன்னாள் துணை வேந்தர் மேஜர் ராஜா, துபாய் டெக்டான் குழுமம் லெட்சுமணன் சோமசுந்தரம், மும்பை பாலாஜி குழுமம் பேச்சிமுத்து ஆகியோரும் நெல்லை ரத்னா விருது பெற்றனர்.
தொடர்ந்து நெல்லை நட்சத்திரம் விருதுகள் வழங்கப்பட்டது. இதில் இந்திய கூடைப்பந்து வீராங்கனை அனிதா பால்துரை, ஊடகவியாளர் சாட்டை துரைமுருகன், சமூக செயல்பாட்டாளர் நிவேக், அயோத்தி பட இயக்குனர் மந்திரமூர்த்தி, ஆகஸ்ட் 15 இயக்குனர் பொன்குமார், பம்பர் பட இயக்குனர் செல்வக்குமார், அறமுடைத்த கொம்பு இயக்குனர் ஜாக்சன்ராஜ், இயக்குநர் தமயந்தி, வசனகர்த்தா ஜா.தீபா ஆகியோர் இந்த விருதுகளை பெற்றுக்கொண்டனர்.
கௌரவ தலைவர் டாக்டர் தி-ல்லை வள்ளல், பொருளாளர் வேல்முருகன் சீனிபாண்டியன் பேராசிரியர் கல்பனா சிவா உள்பட பலர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.


