தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை சார்பில்நேஷனல் இன்ஜினியரிங் கல்லூரியில் நடந்த வட்டார அளவிலான குழு போட்டிகளில் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி ஒட்டுமொத்த சாம்பியனை கைப்பற்றியது.
தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை சார்பில் 2023-24. கல்வியாண்டிற்கான வட்டார அளவிலான விளையாட்டுப் போட்டிகளை நாலாட்டின்புதூர் சாரதா அரசு மேல்நிலைப்பள்ளி கோவில்பட்டி நேஷனல் இன்ஜினியரிங் கல்லூரியில் கடந்த 25ம் தேதி நடத்தியது.
இதில் ஹாக்கி மற்றும் வாலிபால் போட்டிகளில் 14, 17, 19வயது பிரிவிற்கான போட்டியில் முதலிடமும்,மேஜை பந்து போட்டியில் 14, 17 வயதுபிரிவிற்கான போட்டிகளில் முதலிடமும்,எறிபந்து போட்டிகளில் 14, 17, 19, வயது பிரிவிற்கான போட்டிகளில் இரண்டாம் இடமும்,கேரம் போட்டிகளில் இரண்டாம் இடமும்,சதுரங்க போட்டியில் 17 வயதிற்குட்பட்டோர் பிரிவில் முதலிடமும், 14 வயதிற்குட்பட்டோர் பிரிவில் இரண்டாம் இடமும்,தடகளப் போட்டியில் 3000, 1500,மீட்டர் ஓட்டப் போட்டியில் மகராசி முதலிடமும்,
மும்முறை தாண்டும் போட்டியில்சுபலட்சுமி முதலிடமும், 3000 மீட்டர் ஓட்ட போட்டியில் நாகலட்சுமி முதலிடமும்,சிங்கலட்சுமி இரண்டாம் இடமும்,புவனா முனிஸ்வரி தடகளப் போட்டியில் மூன்றாம் இடமும்,பெற்று குழு போட்டிகளில் 64 புள்ளிகள் பெற்றுஒட்டு மொத்த சாம்பியன் பட்டத்தை பெற்று தூத்துக்குடி வருவாய் மாவட்ட விளையாட்டு போட்டிகளில் விளையாட தகுதி பெற்றனர்.
குழு போட்டியில் கலந்து கொண்ட பள்ளி மாணவர்களுக்கு பள்ளி வளாகத்தில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. சாதனை படைத்த மாணவிகளை பள்ளி தலைமை ஆசிரியை ஜெயலதா, உடற்கல்வி இயக்குனர் காளிராஜ், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர் முத்து முருகன், உடற்கல்வி ஆசிரியர்கள், ஆசிரியர்கள் பாராட்டினர்.


