நாசரேத் தூய யோவான் பேராலயத்தில் நடந்த உதவிகுருக்கள் அபிஷேக ஆராதனையில் பேராயர் தீமோத்தேயு ரவீந்தர் பங்கேற்றார்.
தென்னிந்திய திருச்சபை தூத்துக்குடி- நாசரேத் திருமண்டலம் நாசரேத் தூய யோவான் பேராலயத்தில் 33 உதவி குருக்கள் அபிஷேக ஆராதனை நடந்தது. பேராலய பாடகர் குழுவினர் பாடல்கள் பாடினர். தூத்துக்குடி- நாசரேத் திருமண்டல பிரதம பேராயரின் ஆணையாளரும், பேராயர் பொறுப்பாளருமான பேராயர் தீமோத்தேயு ரவீந்தர் இறை செய்தி வழங்கி ஜெபித்து உதவி குருக்களை அபிஷேகம் செய்தார். இந்த ஆராதனையில் தூத்துக்குடி- நாசரேத் திருமண்டலத்தில் உள்ள 30 பேர் உதவி குருவாகவும், 3 மகளிர் கௌரவ உதவி குருவாகவும் அபிஷேகம் செய்யப்பட்டனர். முன்னதாக பேராலய வளாகத்தில் பேராயர் தீமோத்தேயு ரவீந்தருக்கு சேகர கமிட்டி மற்றும் சபை மக்கள் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதில் திருமண்டல உப தலைவர் தமிழ்செல்வன், திருமண்டல லே செயலர் நீகர் பிரின்ஸ் கிப்ட்சன், குருத்துவ காரியதரிசி இம்மானுவேல் வான்ஸ்றக், திருமண்டல உயர் நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளின் மேலாளர் பிரேம்குமார் ராஜாசிங், திருமண்டல தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி களின் மேலாளர் ஜேஸ்பர் அற்புதராஜ், கனோன் ஆர்தர் மர்காஷிஸ் சபை மன்ற தலைவர் வெல்ற்றன், நாசரேத் தூய யோவான் பேராலய தலைமைகுரு மர்காஷிஸ் டேவிட் வெஸ்லி, உதவி குரு பொன்செல்வின், சேகர பொருளாளர் எபனேசர், முன்னாள் சேகர பொருளாளர் மர்காஷிஸ் தேவதாஸ், முன்னாள் செயலாளர் ஆனந்தராஜ்,சபை ஊழியர்கள் ஜெபராஜ், எல்சின் தங்கத்துரை மற்றும் குருமார்கள், சபை மக்கள் திரளானோர் பங்கேற்றனர்.


