தூத்துக்குடியில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு வருகிற செப்.2ஆம் தேதி மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.
தூத்துக்குடியில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மில்லர்புரம், புனித மரியன்னை ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் வரும் 2ஆம் தேதி சனிக்கிழமை காலை 10 மணி முதல் 1 மணி வரை மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.
மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை, தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை (UDID) அட்டை, முதலமைச்சர் காப்பீட்டு திட்டத்திற்கான அட்டை, ஆதார் அட்டை ஆகியவை பெறாதவர்கள் இம்முகாமில் கலந்துகொண்டு பயன் பெறலாம். மேலும், பிற உதவி உபகரணங்கள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வேண்டுபவர்கள் இம்முகாமில் கலந்துகொண்டு விண்ணப்பிக்கலாம்.
மருத்துவத்துறையின் மூலம் பொது மருத்துவ சேவையும் (BP, SUGAR CHECK UP) அளிக்கப்படும். 90% சதவீதத்திற்கு அதிகமாக பாதிக்கப்பட்டுள்ள மாற்றுத்திறனாளிகள் முதுகுத்தண்டு பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் தசை சிதைவால் பாதிக்கப்பட்டவர்கள் கூடுதல் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு தூத்துக்குடி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலகத்தினை 0461-2340626 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. .


