தூத்துக்குடி மாநகரில் அமைந்துள்ள தெப்பக்குளத்தை தூய்மைபடுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று மேயர் ஜெகன் பெரியசாமி தெரிவித்தார்.
தூத்துக்குடி மாநகரில் அமைந்துள்ள தெப்பக்குளத்தில் தற்போது நீர் நிறைந்து காணப்பட்டாலும் சுகாதாராமாக இல்லாமல் இருப்பதாகவும் மீன்கள் அடிக்கடி செத்து மிதப்பதாக அப்பகுதி மக்கள் கூறினார். இதையடுத்து தெப்பக்குளத்தை மேயர் ஜெகன் பெரியசாமி பார்வையிட்டார். பின்னர் அவர் கூறுகையில், குளத்தின் கரையை சுற்றிலும் பேவர் பிளாக் கற்களும் வண்ண விளக்குகளும் உட்காருவதற்கான இருக்கைகளும் அமைக்கப்படும்.
குளத்தின் நீரை சுத்தப்படுத்த மீன் வளக் கல்லூரியின் மூலம் என்ன செய்யலாம் என்று ஆலோசனை பெற்று நடவடிக்கை எடுக்கப்படும். குளத்தின் நடுவிலோ அல்லது ஓரத்திலோ செயற்கை நீருற்று மற்றும் மினி ஹைமாஸ் விளக்குகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
இந்நிகழ்வில் திமுக பகுதி செயலாளரும் மாமன்ற உறுப்பினருமான சுரேஷ்குமார், மாநகர துணை செயலாளரும் மாமன்ற உறுப்பினருமான கீதா முருகேசன், வட்ட கழக செயலாளரும் முன்னாள் மாமன்ற உறுப்பினருமான ரவீந்திரன், பகுதி கழக செயலாளர் ரவீந்திரன், மாமன்ற உறுப்பினர் முத்துவேல் உள்ளிட்டோர் உடன் சென்றனர்.


