சிவகளையில் உள்ள ஸ்ரீசோரநாதவிநாயகர் திருக்கோயிலில் ஆறாம் ஆண்டு வருஷாபிஷேகம் நடைபெற்றது.
பெருங்குளம் ஆதின கர்த்தர் செங்கோல் ஆதினம் 103 வது குருமஹா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ சிவபிரகாச தேசிக சத்திய ஞான பரமாச்சார்ய சுவாமிகள் தலைமையில் நடைபெற்றது. விழாவில் வருஷாபிஷேக யாகம் நடைபெற்றது. விழாவில் விநாயகர், சிவன், அம்பாள் கோபுரங்களுக்கு அபிஷேகம் நடைபெற்றது.
அதைத்தொடர்ந்து சிறப்பு பூஜை நடைபெற்றது. விழாவில் செங்கோல் ஆதினம் அருளாசி வழங்கினார். வருஷாபிஷேகத்தை முன்னிட்டு மரக்கன்றுகள் நடப்பட்டன.
விழாவில் நற்குடி வேளீர் புத்தகத்தின் உரையாசிரியர் முடிவை மு.சுப்பிரமணியன்பிள்ளைக்கும் ஆன்மீக ஆசிரியர்கள் நமசிவாயம் மற்றும் கல்யாணி ஆகியோருக்கு பரிசுகள் வழங்கி சிறப்பிக்கப்பட்டனர். விழா ஏற்பாடுகளை சிவகளை சோரநாதவிநாயகர் திருக்கோயில் பாதுகாப்புக்குழு சிவகளை சோரநாதவிநாயகர் வழிபாட்டுக்குழு சிவகளை இந்து நன்குடி வேளாளர் இளைஞர் அணியினர் செய்திருந்தனர்.


