செய்துங்கநல்லூர் கஸ்பா வேளாளர் தெருவை சேர்ந்தவர் குமார் மகன் சிபியோன் (23). இவர் செய்துங்கநல்லூர் ரயில் விபத்தில் கடந்த ஜுலை 20தேதி சிக்கி கொண்டார். இதில் இவரது இடது கால் துண்டானது. அவர் பாளை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைபெற்று தற்போது தனது இல்லத்துக்கு வந்துள்ளார். இவரை தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்க மாவட்ட பொருளாளர் கண்ணன் சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும் வருக்கு மாற்றுதிறனாளி அட்டை பெறுவது உள்பட அரசு நலத்திட்டங்கள் கிடைக்க உதவுவதாக வாக்களித்தார். அவருடன் எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு உள்பட பலர் இருந்தனர்.


