தூத்துக்குடி சிவன் கோயிலில் சுமங்கலி பூஜை நடந்தது. இதில் பெண்கள் திரளாக கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி சிவன் கோயில் என்று அழைக்கப்படும் அருள்மிகு ஸ்ரீ பாகம்பிரியாள் உடனுறை ஸ்ரீ சங்கர ராமேஸ்வரா் கோயிலில் சேவாபாரதி பண்பாட்டு வகுப்பு ஆசிரியர்கள் சார்பில் சுமங்கலி பூஜை நேற்று நடந்தது. இதில் 2007 பெண்கள் கலந்து கொண்டு வரலட்சுமி நோன்பு மந்திரங்களை உச்சரித்து கும்ப வழிபாடு செய்தனர். பூஜையில் கலந்து கொண்ட பெண்களுக்கு வளையல், மஞ்சள் கயிறு, குங்குமம் ஆகியவை பிரசாதமாக வழங்கப்பட்டது.


