தூத்துக்குடியில் பள்ளி மாணவர்களின் கோரிக்கையை ஏற்று உடனடியாக பேருந்து சேவைக்கு மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் ஏற்பாடு செய்தார்.
தூத்துக்குடி மாவட்டம ஓட்டப்பிடாரம் வட்டம் மேலமுடிமண் கிராமத்தில் இருந்து கீழமுடிமண் கிராமத்துக்கு 50 பள்ளி மாணவர்கள் படிக்க போகின்றனர். அங்கிருந்து இரண்டு கிலோ மீட்டர் தூரத்திற்கும் மேல் தினமும் நாங்கள் நடந்து கொண்டுதான் செல்கின்றோம். எங்களுக்கு பேருந்து வசதி கிடையாது என்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் பேருந்து வசதி கோரி பள்ளி மாணவர்கள் கோரிக்கை வைத்தனர்.
அதற்கு மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் பள்ளி செல்வதற்கு உடனடியாக பேருந்து வசதியினை ஏற்பாடு செய்துள்ளார்கள். தற்போது தினமும் பள்ளிக்கு மாணவர்கள் பேருந்தில் செல்கின்றனர். இதை ஏற்பாடு செய்து தந்த மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களுக்கு மாணவர்கள் தங்களது நன்றியிiனை தெரிவித்துள்ளனர். அதன் பிறகு கிராமத்திற்கு வந்த அரசு பேருந்துக்கு கிராம மக்கள் மாலை அணிவித்து, வாழைமரம் கட்டி உற்ச்சாகமாக வரவேற்றனர்.


