தூத்து்ககுடி மாவட்டத்தில் “பால கல்யாண் புரஸ்கார் விருது” பெற தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.
இது தொடர்பாக ஆட்சியர் செந்தில்ராஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பு மத்திய அரசின் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் மூலம்,”பால கல்யாண் புரஸ்கார் விருது” அறிவிக்கப்பட்டு, தகுதிவாய்ந்த, தனிப்பட்ட சிறந்த 18 வயதிற்குட்ப்பட்டவர்களிடமிருந்து கீழ்கண்ட தகுதியுடையவர்களிடமிருந்து இணையதள விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இந்திய குடிமகனாக மற்றும் இந்தியாவில் வசிப்பவராக இருத்தல் வேண்டும். 18 வயதிற்குட்ப்பட்டவராக இருத்தல் வேண்டும். கடைசி 2 ஆண்டுகளுக்குள் சாதனை புரிந்திருக்க வேண்டும். துணிச்சலுடன் ஒரு செயல் ஃ சம்;;பவம் செய்து தங்களது உயிருக்கு ஆபத்தை எதிர்நோக்கும் தன்னலமற்ற சேவை புரிந்த குழந்தைகளுக்காக இவ்விருது வழங்கப்படுகிறது.
இயற்கைக்கு எதிராக சிறந்த தைரியமான செயல் அல்லது மனிதனால் உருவாக்கப்பட்ட சூழநிலைகள் அல்லது மன வலிமையின் விதி விலக்கான செயல், சுய மற்றும் சமூகத்திற்கு கடுமையான ஆபத்தை எதிர்கொள்வதில் புத்திசாலித்தனமாக செயல்பட்டவர்களுக்கு இவ்விருது வழங்கப்படுகிறது.
விளையாட்டு, சமூக சேவை, அறிவியல் தொழில் நுட்பம், சுற்றுச்சூழல், கலை மற்றும் கலாச்சாரம், புதுமை ஆகியவற்றில் சிறந்த சாதனை புரிந்தவர்களுக்கு இவ்விருது வழங்கப்படுகிறது. மேலும் இவ்விருதினை முன்பு பெற்றவராக இருத்தல் கூடாது.
மேற்காணும் தகுதியுடையவர்கள் ; www.awards.gov.in என்னும் இணையதளத்தில் விண்ணப்பிக்க தெரிவிக்கப்படுகிறது. விண்ணப்பங்கள் இணையதளம் வழியாக சமர்ப்பிக்க இறுதிநாள் 31.08.2023 ஆகும். இணையதளத்தில் விண்ணப்பம் செய்த பின்பு மாவட்ட சமூகநல அலுவலர், மாவட்ட ஆட்சியர் வளாகம், தூத்துக்குடி தொலைபேசி எண் 0461-2325606 என்ற முகவரியை தொடர்பு கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது. இறுதி நாளிற்குப் பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


