கருங்குளம் யூனியன் அலுவலகம் முன்பு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்க தூத்துக்குடி மாவட்டதலைவர் வேல்முருகன் தலைமை தாங்கினார். 10 வருடம் பணி முடித்த சத்துணவு ஊழியர்களை அனைத்து காலி பணியிடங்களிலும் நிரப்பி, வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும், காலை சிற்றுண்டி திட்டத்தை சத்துணவு ஊழியர்களைக் கொண்டு நிறைவேற்ற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.


