உலக புகைப்பட நாள் (World photograph day) புகைப்படங்களின் சிறப்பையும், புகைப்படக்காரர்களின் திறமையும் கொண்டாடும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 19 ஆம் தேதி உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.
புகைப்படத்தின் கலை நயத்தை கொண்டாடும் ஒரு வாய்ப்பை இந்த நாள் வழங்குகிறது. இந்த தினத்தை முன்னிட்டு போட்டோகிராபி துறையின் மீது உள்ள ஆர்வத்தை பகிர்ந்து கொள்ளும் புகைப்பட ஆர்வலர்கள் ஒன்று சேர்ந்து உலகின் மற்ற பகுதிகளுக்கும் தங்கள் முறைகள் மற்றும் யோசனைகளைப் பகிர்ந்து வருகின்றனர். குறிப்பாக இந்த துறையின் படைப்பாற்றல் மற்றும் நுணுக்கங்களைக் கொண்டாடும் விதமாக இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது. பல சகாப்தங்களாக உலகைக் கவர்ந்த இந்த கலை வடிவத்தைத் தொடர அதிகமான மக்களை ஊக்குவிக்கும் வாய்ப்பாக இந்த தினம் செயல்படுகிறது.


