தூத்துக்குடியில் நடைபெற்ற குறுவட்டம் பூப்பந்தாட்ட போட்டியில் பெண்கள் பிரிவில் ஹோலி கிராஸ் பள்ளி மாணவிகள் வெற்றி பெற்றனர்.
தூத்துக்குடி புனித பிரான்சிஸ் சவேரியார் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற பள்ளிகளுக்கு இடையேயான குறுவட்டம் பூப்பந்தாட்ட போட்டியில் பெண்கள் பிரிவில் 14 வயதுக்கு உட்பட்ட ஜுனியர் பிரிவிலும், 17 வயதுக்கு உட்பட்ட, சீனியர் பிரிவிலும் 19 வயதுக்கு உட்பட்ட சூப்பர் சீனியர் பிரிவிலும் ஹோலி கிராஸ் ஆங்கிலோ இந்தியன் பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவியர்களே முதலிடத்தை பெற்றனர்.
ஜுனியர் பிரிவினர் அபிகேல் மஸ்கர்னாஸ் தலைமையிலும் சீனியர் பிரிவினர் எலேஜா தலைமையிலும் சூப்பர் சீனியர் பிரிவினர் அபிஷா தலைமையிலும் விளையாடி வெற்றி பெற்ற வீராங்கனைகளுக்கு பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது. வெற்றி பெற்ற மாணவியர்கள், பயிற்சியாளர் பாலசிங் ஆகியோருக்கு ஹோலி கிராஸ் ஆங்கிலோ இந்தியன் பெண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியை, உடற்கல்வி ஆசிரியைகள் சோபியா, சுஜி ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.


